Cinema

Official Statement From Superstar Rajinikanth

Press release from Theater Exibiters assosiation

காஞ்சிபுரம் – திருவள்ளுர்  மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம்   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளுர் மாவட்ட  திரையரங்கு  உரிமையாளர்களின்  அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 22.05.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்150க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.   இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் MG  முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் நாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.  அவை வருமாறு:…


Movie NaveenMay 23, 2017