Cinema

Actor Samykannu Passed away

  மூத்த தமிழ்த்திரைப்பட நடிகர் நடிகர் சாமிக்கண்ணு மரணம் 

மூத்த தமிழ்த்திரைப்பட நடிகர்  சாமிகக்கண்ணு உடல் நல்ல குறைவால் நேற்று (சனிக்கிழமை )  மாலை சென்னையில்  காலமானார்.

தமிழ் சினிமாவிலன்  ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜனி,கமல் முதல் இன்றைய   தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக பணியாற்றிய

400 க்கு மேல் படங்களில் நடித்துள்ளார். தலைமுறைகள் கண்ட , தனது நடிப்பாற்றலால் ரசிக உள்ளங்களில் சிரஞ்சீவியாக வாழும் மூத்த  கலைஞரான சாமிக்கண்ணு

தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி 1954 ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணண், எஸ் பி முத்துராமன் , மாதவன் ,மற்றும் மகேந்திரன்,இராமநாராயணன், ராஜசேகர், ராஜ்கிரண், மற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

பட்டிக்காடாபட்டணமா, பாட்டும்பரதமும்,நான், அன்னக்கிளி, உரிமைக்குரல், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, உதிரிப்பூக்கள்,
சகலகலாவல்லவன், வண்டிசக்கரம்,  என்ராசாவின்மனசிலே, மகாபிரபு போன்ற படங்களில் இவர்  ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்கள் மனதை கவர்ந்து

நிலைத்து நிற்ப்பவையாகும்.

அன்னாரது மறைவு நாடக-திரைப்பட நடிகர் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.