Cinema

TFPC producers council press release against Fefsi’s strike announcement.

​Tamil Film producer Council ​News :

TFPC producers council press release against

Fefsi’s strike announcement.

தயாரிப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு.. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களின் நலன் காக்க தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடம் நேரம் மற்றும் நாட்களின் விவரங்களை உடனடியாக நமது சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9500079899., 9840287999

இப்படிக்கு
நிர்வாகிகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – அறிக்கை

30.07.2017

சென்னை

திரு . செல்வமணி மற்றும் நிர்வாகிகள்.,

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்

சென்னை.

அன்புடையீர் வணக்கம்

தற்போது நிலவி வரும் பிரச்சனைகள குறித்த தங்கள் கடிதம் ஊடகங்கள் மூலம் கிடைத்தது.  அதில் உங்களதுபக்க நிலைகளையும் நியாயங்களையும் விளக்கியிருந்தீர்கள். மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்து எழுதியதும் மகிழ்ச்சி. எனினும் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. இந்நிலையில் நாங்கள் வழக்கம்போல தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நிகலும் பட்சத்தில் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஏனெனில், தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைதுறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் பெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை. ஆனால் பெப்சியுடன் மட்டும் தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது, ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதே வேலையில் தயாரிப்பு தொழில் சார்ந்த  மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை எற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் மூலம் பெப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது, ஆனால் இதே விசயம் ஆண்டாண்டு காலமாக திரும்ப திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது. இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம். மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகத் தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

25 ஆயிரம் குடும்பங்களை கொண்ட ஒரு அமைப்பை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்துவரும்  தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அதன் நிர்வாகக்குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவது தேவையற்றது என கருதுகிறோம். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள திரு.தனபால் கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானதில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விசயத்தை புறந்தள்ளுகிறோம். ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது. இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.

இப்பவும் நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு என்றும் தொழிலாளர்கள் வேண்டும். பெப்சியுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம் தான். ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் முழுவதுமாக இனி இணைந்து செயல்பட முடியாது. மேலும் பில்லா பாண்டி தயாரிப்பாளருக்கு எற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பட்சத்தில் மற்ற சங்கங்கள் குறித்த சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

நன்றி

நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கம்